பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், ஏன் தெரியுமா?
எங்களுக்கு தெரியும். உங்களுக்கு பீஸா, பர்கர், வறுத்த சிப்ஸ் பிடிப்பது போல, பீட்ரூட்டை பிடிக்காதென்று. நல்லதை யாருக்குதான் முதலில் பிடிக்கும். உண்மையான நண்பர் யார் என தெரிந்து கொண்ட பின்தான் அவரை கொண்டாடுவோம்.
அப்படிதான் பீட்ரூட்டும். அதனை பெரும்பாலான மக்களுக்கு பிடிக்காது. அதன் நிறமோ, அல்லது அதன் ருசியோ எதுவென்று தெரியாது, ஆனால் பீட்ரூட்டை பார்த்தாலே ஓடி விடுவார்கள். ஆனால் பீட்ரூட் உடலுக்கு செய்யும் நன்மைகளை தெரிந்தால், அதனை நிச்சயம் ஒதுக்க மாட்டீர்கள்.
பீட்ரூட்டில் தேவையான விட்டமின் மினரல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளன. ஆனால் அது உடல் மற்றும் மனம் சம்பந்தமான பாதிப்புகளுக்கு எவ்வாறு தீர்வளிக்கிறது என பார்க்கலாமா?
மன அழுத்தத்தை குறைக்கும்
இந்த காலகட்டங்களில் மன அழுத்தம் என்பது சாதரணமாகிவிட்டது. பொருளாதாரம் அந்தஸ்து என எல்லாவற்றிற்கும் போட்டி போட்டுக் கொண்டு வெற்றியை நோக்கி எல்லாரும் தள்ளப்படுகிறார்கள். இதன் விளைவு மன அழுத்தம்.
மன அழுத்தத்தை பீட்ரூட் குறைக்கின்றது. ஆனால் நீங்கள் மருத்துவரை அணுகி அவர் தரும் தரும் மருந்துகளை உட்கொள்ளும்போது, அதனால் பக்க விளைவுகள் ஏற்படும். உடல் பருமன், இன்னும் பல பிரச்சனைகளை தரும்.
அதை விட எளிமையான வழி, பீட்ரூட் சாப்பிடுவதுதானே. அதிலுள்ள பீடெயின் என்ற பொருள் மூளையில் உள்ள நரம்புகளை தளர்த்து, புத்துணர்வு தருகிறது. எனவே பீட்ரூட் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், எல்லாமே டே இட் ஈஸி பாலிஸிதான்.
பீட்ரூட் இன்னொரு வயாகரா
அந்த காலகட்டத்தில் ரோம நகரங்களில் பாலுணர்வை தூண்ட பீட்ரூட் தான் உணவில் எடுத்துக் கொள்வார்களாம். இது வயாகராவை விட பலனை தருகிறது. பக்க விளைவுகள் இல்லை. இதனை இயற்கை வயாகரா என மருத்துவர்கள் அழைக்கிறார்கள். பீட்ரூட்டிலுள்ள போரோன் என்ற மினரல் ஆண், பெண்களின் செக்ஸ் ஹார்மோன்களை தூண்டுகிறது.
அனிமியாவை போக்குகிறது
ரத்த சோகைக்கும் அற்புத பலனை பீட்ரூட் தருகிறது. இவை உடலில் ரத்த செல்களை உற்பத்தி செய்யத் தூண்டுகின்றன. பீட்ரூட் இரும்பு சத்தை அதிகம் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இரும்புசத்தினை உடலில் உறிஞ்சு கொள்ளவும் உதவி புரிகிறது.
தூக்கமின்மை
பீட்ரூட்டில் பீடெய்ன் மற்றும் ட்ரிப்டோஃபேன் ஆகியவை நரம்புகளை தளர்த்தி, தூக்கம் வரச் செய்கிறது. தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் தூக்கம் உங்கள் கண்களை தழுவும்.
ஃபோலேட் என்ற பொருளும் பீட்ரூட்டில் உள்ளது. அது நல்ல மன நிலையை உண்டாக்குகிறதாம். மன அழுத்தம் இருப்பவர்கள் கட்டாயம் பீட்ரூட் எடுத்துக் கொண்டால் பலன் கிடைக்கும்.
ரத்தக் கொதிப்பு மற்றும் இதய கோளாறு
ரத்தக் கொதிப்பினை பீட்ரூட் குறைக்கிறது. இதய அடைப்பு, கோளாறுகளை வர விடாமல் தடுப்பதில் பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கின்றது.இனிமேலாவது பீட்ரூட்டை வெறுக்காதீர்கள். அது நல்லதை தவிர வேறொன்றும் நமக்கு செய்வதில்லை.
இதை அனைவருக்கும் பகிரவும்
இவன் உங்கள் நண்பன்
இவன் உங்கள் நண்பன்