இன்றைய மோசமான உணவுப் பழக்கத்தால், உடலில் நச்சுக்களின் தேக்கம் அதிகரித்து, அதன் காரணமாக பல்வேறு நோய்கள் வேகமாக உடலைத் தாக்குகின்றன. உடலில் உள்ள நச்சுக்களின் தேக்கத்தைக் குறைக்கவும், உடலைத் தாக்கும் நோய்களில் இருந்து பாதுகாப்புடன் இருக்கவும் பல இயற்கை பானங்கள் உள்ளன.
அதில் ஒன்று தான் கற்றாழை ஜூஸில் பூண்டு சாற்றினை சேர்த்து குடிப்பது. இங்கு அந்த கற்றாழை பூண்டு ஜூஸை எப்படி தயாரிப்பது என்றும், அதைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
கற்றாழை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு சாறு - 2 டீஸ்பூன்
பூண்டு சாறு - 2 டீஸ்பூன்
செய்முறை:
மிக்ஸியில் கற்றாழை சாறு மற்றும் பூண்டு சாறு, சிறிது தண்ணீர் ஊற்றி ஒருமுறை அடித்தால், ஜூஸ் ரெடி!
இந்த ஜூஸை வாரத்திற்கு 5 நாட்கள் பருகி வர உடலைத் தாக்கும் பல நோய்களில் இருந்து விடுபடலாம்.
கொலஸ்ட்ரால் குறையும்
(CHOLESTEROL)
(CHOLESTEROL)
கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், இந்த ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வர, உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைந்து, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
சைனஸ் பிரச்சனை சரியாகும்
(SINUS)
(SINUS)
கற்றாழை பூண்டு ஜூஸ் குடித்தால், நாசி துவாரங்களில் உள்ள நோய்த்தொற்றுகள் மற்றும் உட்காயங்கள் குறையும். இதனால் சைனஸ் பிரச்சனைகள் குணமாகும்.
உடல் எடை குறையும்(WEIGHT LESS)
இந்த பானம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புச் செல்களை கரைத்து, உடல் எடை வேகமாக குறைய உதவும்.
புற்றுநோய்(CANCER)
கற்றாழை பூண்டு ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் வளமாக உள்ளது. இது உடலில் உள்ள புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும்.
காய்ச்சல் குணமாகும்(FEVER)
இந்த பானம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, அடிக்கடி காய்ச்சலை உண்டாக்கும் நோய்த்தொற்றுகளை அழித்து, உடலைப் பாதுகாக்கும்.
இரத்த அழுத்தம் குறையும்(BP)
இந்த ஆரோக்கிய பானம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது. இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
மூளை ஆரோக்கியம்
கற்றாழை பூண்டு ஜூஸில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது மூளை செல்களை வலிமைப்படுத்தி, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, அல்சைமர் போன்ற ஞாபக மறதி பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.
இதை அனைவருக்கும் பகிரவும்
இவன் உங்கள் நண்பன்
இவன் உங்கள் நண்பன்
EmoticonEmoticon