Benefits of Green Banana(பச்சை வாழைப்பழம்)

பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

  • பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது.
    குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது.

  • பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

  • குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

  • பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமெனில் இதனை சாப்பிடலாம்.

  • மேலும், இதய நோயாளிகளுக்கும் சிறந்தது, அதுமட்டுமின்றி சூடாக்கிய 1 கப் பச்சை வாழைப்பழத்தில் 3.6 கிராம் நார்ச்சத்து உள்ளது, எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

  • மஞ்சை வாழைப்பழத்துடன் ஒப்பிடுகையில் பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது, ஒரு கப் பச்சை வாழைப்பழத்தில் 531 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.

  • எனவே இதயநோயாளிகள் இதனை சாப்பிட வேண்டும், ஆனால் அதிக அளவு பொட்டாசியம் சத்து சிலரின் உடலுக்கு பயனிளிக்காது என்பதால் அதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
  • மேலும், இதில் விட்டமின் B6 நிறைந்துள்ளதால் உடலில் ஆக்ஸிஜனேற்றம் சிறப்பாக செயல்புரிய உதவுகிறது, மேலும் அது ஹீமோகுளோபின் உருவாவதற்கு விட்டமின் B6 அவசியமான ஒன்றாகும்.

  • மேலும், விட்டமின் B6 இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • மேலும், சீரான பற்களின் வளர்ச்சிக்கு பச்சை வாழைப்பழம் சாப்பிட வேண்டிய ஒன்றாகும். 
இதை அனைவருக்கும் பகிரவும்
இவன் உங்கள் நண்பன்

Benefits of Red Banana(செவ்வாழை பழம்)

தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!


செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது.
  • குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. 
பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
  • பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது.   
பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
  • செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. 
  • செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
  • இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். 
  • மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
  • எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏதும் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழையை உட்கொண்டு வாருங்கள்.
  • செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு.
  • எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.
  • செவ்வாழையில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும்.
  • நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க விரும்பினால் தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடுங்கள்.
  • நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். எப்படியெனில் இதில் இயற்கையாக ஆன்டாசிட் (Antacid) தன்மை உள்ளது. இதனால் இப்பழத்தை தினமும் உட்கொண்டு வர நெஞ்செரிச்சல் பிரச்சனை நீங்கும்


இதை அனைவருக்கும் பகிரவும்
இவன் உங்கள் நண்பன்